
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பதிகங்கள்

தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.
English Meaning:
In Seeking be not Discouraged by Initial FailuresWhen you seek to reach the Lord
And have a miss,
Take it as the work of your evil Karma in the Past,
And so persevere in your devotion fervent;
You shall at last reach the Primal Lord.
Tamil Meaning:
சிவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அந்தப் பிராரத்தம் தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; சிவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் சிவபத்தி செய்பவராயே விளங்குவர்.Special Remark:
வினையை நுகர்வோர் ஆகார்; அதனால், அந்தப் பிராரத்தம் கட்டாயமாக விளைத்துச் செல்லும் ஆகாமியத்தையும் விளைக்கமாட்டாது உடல் ஊழாய் ஒழியும்` என்பதாம்.``நின்னைஎப் போதும் நினையலொட்டாய் நீ;
நினையப்புகின்,
பின்னைஅப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று
நாடுவித்தி``9
எனப் பிராரத்த விளைவிலும் சிவனையே நினைந்தவாற்றை உணர்க. `தத்துவன் றன்னைத் தலைப்படும் காலத்து` என மாற்றியுரைக்க. விதி - பிராரத்தம் விதியை விளைவை, ``விதி`` என்றும், அயர்வொழிந்து நிற்றலை, ``நேடி`` (தேடி) என்றும் கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்று வந்தது.
இதனால், ஞானியர் பிராரத்தத்தால் தாக்குண்ணாது நிற்குமாறு கூறப்பட்டது. இவ்வாறு நிற்பவர் ஞானகுரு என்பதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage