
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பதிகங்கள்

மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி
உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும்
கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு)
அருவினை சோரும் அழிவார் அகத்தே.
English Meaning:
Love Lord and Sever PasasOur Holy Nandi
Once He loves, separation Knows not;
Think of His Form
And within you He melts;
Enter into His Essence
And see Him in your heart;
For those who can do this,
The seminal Karmas slumbering die;
The Ego-Consciousness forever perishes.
Tamil Meaning:
ஒருவரை அணுகிவிட்டால், பின்பு அவரை விட்டு ஒருபோதும் நீங்குதல் இல்லாதவர் எங்கள் நந்தி பெருமான். அந்நிலையில் அவரது திருவுருவத்தை உள்ளே நினைத்தால், நினைக்கின்ற உள்ளங்களை அஃது உருக்கிவிடும். அதனால், அங்ஙனம் உருகிய உள்ளம் உடையவர்கள் அவரிடத்தே ஒடுங்கி, அவரது அருள் கண்ணாகவே எதனையும் காண்பர். அங்ஙனம் காண வல்லார் முன்பு அவரது பிராரத்த வினை இவ்வுலகத்தில் மிகவும் மெலிந்து விடும். (உயிரைத் தாக்காது, உடல் ஊழாய்க் கழியும்` என்பதாம்.) அதனால், அவர் தியானித்த அந்த உருவத்திலே அடங்கித் தற்போதம் அற்றிருப்பர்.Special Remark:
`அதனால், அவர்க்குப் பின்னை வினையாகிய ஆகாமியமும் உண்டாகாது` என்பதாம் கரு - முதற்பொருள் தாக்க வரும் வினை தாக்க மாட்டாது மெலிதல் பற்றி, ``வல்லார்க்குச் சேரும்`` என தாக்கப்படுவோர்க்கு நான்கன் உருபு கொடுத்துக் கூறினார்; அவனை `அவனுக்கு இவன் இளைத்தான்` என்பது போலக் கொள்க. அரு - சூக்குமம். பிராரத்தம் யாரும் அறியாதபடி வருதாதல் அறிக. `அருவிகண் சோரும்` என்பதும் பாடம்.இதனால், `ஞான குருவாய் வந்து ஞானத்தைத் தந்த சிவன் பின்பு நீங்கான் ஆதலின், ஞானியரும் அவனை விடாது பற்றி வினை திரப்பெறுவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage