
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.
English Meaning:
Death Nears; Yet They Seek Not PeaceThe God of Death leaps forward,
Agreeable to him
The fated days too roll away;
You tremble and shake,
What, though, that comes of it?
If Peace you seek,
Dip the ladle of your heart
In the boiling broth of love.
Tamil Meaning:
உலகீர், உங்களுக்கு இவ்வுடம்போடு கூடி வாழ்தற்கு வரையறுத்த நாள்கள் யாவும் தவம் செய்யாமையால் அவமே கழிந்தொழிந்தன. ஆகவே, உங்களை இவ்வுடம்பினின்றும் பிரித்தெடுத்துக் கொண்டு துள்ளி ஓடுபவனாகிய கூற்றுவனும் வந்துவிட்டான். இப்போது நடுங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் அமைதியுற வேண்டின் கொதிக்கின்ற கூழில் கையை யிடாமல் அகப்பையை இட்டு அள்ளி ஆற்றி உண்பதுபோலும் செயலைச் செய்தலே தக்கது.Special Remark:
``சார்வாய்க் கழிந்த`` என்றாராயினும், `கழிந்து சார் வாயிற்று` என்றலே கருத்தென்க. கழிந்து, செயவெனெச்சத் திரிபு. தெளிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. சார்வு - நெருங்குதல். ``துடுப்பிடல்`` என்பது, அதுபோலும் செயலைச் செய்தலைக் குறித்தது. கொதிக்கின்ற கூழ், கூற்றுவனால் கணக்கிட்டுக் கொள்கின்ற நாட்கள். கையிடுதல், அதனையறியாது தம் வயத்தன வாகக் கருதிக்கொண்டு அவற்றைத் தவத்தில் அல்லாமல் அவத்தில் கழித்தல். துடுப்பிடுதல் - சில நாட்களையாயினும் தவத்தில் கழித்தல். ஆம் - பொருந்தும் - ஏகாரம் ஈற்றசை.இதனால், கூற்றத்தைக் கடத்தற்குரிய செயலில் நாளைக் கழியாமல், கூற்றத்தால் அடர்த்தற்குரிய வகையில் கழித்தலை நோக்கி இரங்கியவாறு,
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage