
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.
English Meaning:
What do they get, Who do not Adore LordWell do they see
Life in a trice fleets away;
Yet do they in contention stand;
What though these men get?
They stand not in ways righteous,
They adore not His Holy Feet
They know not the Primal One
In love endearing.
Tamil Meaning:
நாள்கள் மிக விரைவாக வந்து வந்து போவதை அறிந்திருந்தும் பலர் அந்நாள்களை வாது செய்வதிலே கழித்து விடு கின்றனர். ஒழுக்கத்தில் நில்லாமல் வாதுசெய்வதனால் அவர் என்ன பயனை அடையப் போகின்றனர்! ஒரு பயனும் இல்லை. ஒழுக்கத்தில் நின்றும், இறைவன் திருவடியை வணங்கியும் வருவராயின் நாளடைவில் இறையன்பு தோன்றி வளர அவனை அவர்நேரே அறிந்து இன்புறுவர். அதனை அவர் அறிகின்றாரில்லையே!Special Remark:
``வாது`` எனப் பொதுப்படக் கூறினமையால் உலகியல் பற்றிய வாது, மெய்ந்நெறி பற்றிய வாது என்னும் இரண்டும் கொள்ளப் படும். அதுபின்னர் ``நீதியில் நின்று`` எனவும், ``நின்மலன் தாள் பணிந்து`` எனவும் கூறியதனாலும் விளங்கும். முன்னர் அவ் விரண்டையும் கூறினமையால், பின்னர் ``ஆதியை`` என எடுத் தோதினார். ``நின்றும், பணிந்தும்`` என்னும் வினையெச்சங்கள், ``அறியகில்லார்கள்`` என்பதில் உள்ள அறிதல் வினையோடு முடிந்தது. ஆகவே, ``அறியகில்லார்கள்`` என்பது `அறிதலைச் செய்ய கில்லார்` எனப் பொருள் தந்தது.இது, மேற்கூறிய வினைத்துயரை அறிந்து அதனினின்றும் நீங்கும் வழியை எடுத்தோதி அதனை மனிதப் பிறப்பை எய்தியும் பெறாது கெடுகின்றவரது கேடு நோக்கி இரங்கியவாறு,
``பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்``
எனப் பின்னரும் இரங்குவார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage