
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை
ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.
English Meaning:
They Care Not for the Fruit of This BirthThe birds, beasts, and the humans several,
They all, all, in endearment seek Him not;
They who in Tapas intense realized Him
Drink and run in rapture surpassing;
They indeed are the beings
Who have reaped the fruit of their birth here below.
Tamil Meaning:
விலங்குகள், மக்கள், தேவர்கள், பறவைகள், மற்றும் இவர்கள்போல் உள்ள இனத்தவர் ஆகியோரில் ஓரினத்தவரும் சிவபிரானிடத்தில் அன்பு வைத்து, அதனை மேலும் மேலும் பெருக்கி வழிபடாமையில்லை. அதனை அறிந்தவர்கள் அப்பெருமானது திரு வருளைப் பெறுதற்குரிய பெரிய தவத்தைச் செய்து, அதன் பயனாக விளைந்த அன்பினால் சிவபெருமானைக் கண்டால் இனிய பாலைப் போலப் பருகிவிடுவார் போல்வார்; `அவன் வெளிப்படும் இடம் எது` என்று தேடிப்பல திசைகளிலும் ஓடுவர். அதனால், தாம் மண்ணில் மக்களாய்ப் பிறந்த பயனை எய்துவர்.Special Remark:
`அறிவிலார் அங்ஙனமின்றி வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவர்` (தி.5 ப.90 பா.3) என்பதாம். எழுவகைப் பிறவியுள் உயர்ந்தது, தெய்வப் பிறப்பு ஆதலின் அதனை எய்தினோரை, ``மிக்கோர்`` என்றார். வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அர்ச்சிப்பர்`` (சிவஞான சித்தியார், சூ. 2,91) என்பது சாத்திரம். இவையெல்லாம் புராணங்களில் மிகவெளிப்படை. ``ஒருவர்`` என்பதில் ஒன்று இனத்தைக் குறித்தது. `ஒருவரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அன்பு வைத்துச் செய்து` என மாற்றி உரைக்க, ``உன்னாதது`` என்றது எதிர்மறைத் தொழிற் பெயர். அதனை உணர்ந்தோர் மாதவம் செய்து பருகுதல் முதலியவற்றைச் செய்வர்` என்க. அன்பால் பிறரை இறுகத் தழுவிக் கொள்ளுதலே, பருகுதல் போல்வதாகக் கூறும் மரபினை, ``பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை - பெருகலிற் குன்றலினிது`` (திருக்குறள், 811) என்னும் திருக்குறளாலும் அறிக. `தேடி ஓடுதலும் அன்புடையாரது செயல்` என்பதனை,``... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் னெவ்விடத்தான்,
எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன்`` -தி.8 நீத்தல் விண்ணப்பம், 45
என்று அருளிச் செய்தவாற்றானும் அறிக.
இதனால், அறிவுடையாரது செயலை விதந்து கூறும் முகத்தால் அறிவிலாரது நிலைமை நோக்கி இரங்கியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage