
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
English Meaning:
Human Birth is Rare; Yet They Seek Not Lord`s FeetRare is human birth,
Yet they seek not Lord`s Feet,
So rare to reach;
They attained the rare human birth,
Yet missed this Treasure Rare,
They are but crawling creatures, indeed.
Tamil Meaning:
பெறுதற்கரிய பிராணிகள் ஞானத்தையும், அது வழியாக வீட்டையும் பெற இயலாத பிராணிகள். அவை மக்களை யொழித்து ஏனைய உயிர்கள். அவைகளால் பெறுதற்கரிய பேறு இறைவன் திருவடி. ``பெறார் பேறிழந்தார்`` என்க,ஏனைய வெளிப்படை.
Special Remark:
``அரிய`` என்னும் பெயரெச்சக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது வினைமுதற்பெயர் கொண்டது. ஏனைய செயப்படு பொருட் பெயர் கொண்டன. இறைவன் திருவடிப் பேற்றை `ஏனை உயிர்கள் பெற இயலாத பேறு` என்றமையால், `மக்கட் பிறவியைப் பெற்றும் அப்பேற்றைப் பெற நினையாதவர்கள் மக்களாகாது, ஏனை உயிர்களேயாவர்` என்பது கருத்தாயிற்று.இதனால், கிடைத்த சாதனத்தின் அருமையை அறியாது அதனை வீண்படுத்துகின்ற அறியாமை நோக்கி இரங்கியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage