
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.
English Meaning:
They Are Distracted by DoubtsImperishable fame,
And truthful fruit of Tapas full,
The Lord ever bestows
Only on those who endear Him;
Yet the world think
``This the God, That the God;``
Thus distracted
Bruised they fall, hands hitting on rocks.
Tamil Meaning:
அனைத்திற்கும் முதல்வனாகிய எங்கள் சிவ பெருமான் உலகியலில் நிலைத்த புகழையும், நிரம்பிய மேலான தவத்தையும், அதன் பயனாகிய உண்மை ஞானத்தையும் தன்னை யடைந்த அடியார்களுக்கே அளித்தருள்வான் ஆகையால், உலகர் அவற்றை இழத்தற்குக் காரணம் அவ்வடியவரோடு மாறுபட்டு, `அது கடவுள், இது கடவுள்` எனத் தத்தமக்கு எட்டிய பொருள்களைத் தனித்தனி கூறித் தம்முள் கலாய்த்துக்கொண்டு, ஞானம் குறை கையாலேயாம். இஃது இரங்கத்தக்கது.Special Remark:
``நிறைதவத் துண்மையும்`` என்ற அனுவாதத் தானே நிறைதவத்தை நல்குதலும் பெறப்பட்டது. அன்றுதல் - மாறுபடுதல்; ``அன்றினார் புரமெரித்தார்க்கு`` (தி.12 பூசலார். பு.1) என்றது காண்க. சிலர் நிலம், நீர், தீ முதலிய சடப் பொருள்களையே தெய்வமாகக் கூறுதல் பற்றி, ``அது, இது`` என அஃறிணையாற் கூறினார்.இது, மேற்கூறிய பழிமொழியாளர் மெய்ப்பொருளை யுணராது தாம்தாம் கொண்டதே கொண்டு வாதிட்டு ஒழிதலை நோக்கி இரங்கியவாறு. இவரை நோக்கியே யன்றோ,
``... ... ... ... மற்றோர் தேவர் எத்தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே`` -தி.8 அச்சப்பத்து
என்று அருளிச் செய்தார். ``சலமிலன் சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` (தி.4 ப.11 பா.6) என்று அருளிச் செய்ததும் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage