
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை
ஆதி அயனென் றமரர் பிரானென்று
நாதியே வைத்தது நாடுகின் றேனே
English Meaning:
They Seek Not LightThey seek not His Light
In unbroken continuity;
They are like those
Who cherish not Him that is gold,
The Unrighteous they are;
``O! Lord, the Primal One!
You the Fruit of Wisdom!
The Lord of Celestial Beings!
My Sole Refuge!``
Thus I seek Him, ever and ever.
Tamil Meaning:
அற உணர்வு இல்லாதார் பொன்னைப் பெற்றால் அதனது பயனை யறிந்து அப்பயனை எய்தாது பொன்னை வாளா வைத்திருந்தே இறந்தது போலச் சிலர் சிவனை அறிந்தும் அவனால் அடையத் தக்க பயனை அறிந்து அம்முறையில் அவனை வழிபட்டு அப்பயனைப் பெறுகின்றவர் யாரும் இல்லை. ஆயினும் யான் உலகத்தைச் செயற்படுத்துதற்கு, `படைப்புக் கடவுளாகிய பிரமன்` என்றும், மற்றும் `தேவேந்திரன்` என்றும் இப்படிப் பல தேவரைத் தக்க வாறு சிவன் நியமித்திருக்கின்ற பெருஞ்செயலை நினைந்து அவனால் அடையத்தக்க பயனை அடைகின்றேன்.Special Remark:
`பிற தேவரால் அடைவிக்க முடியாது சிவன் ஒருவனாலே அடைவிக்கப்படும் பிறவி நீக்கம். அஃது அயன் முதலிய தேவர் பலரையும் அவனே படைத்து அவரவர் அதிகாரத்தில் நியமித் திருத்தலால் விளங்கும்` என்பது பின்னிரண்டடிகளால் குறிப்பால் உணர்த்தப்பட்ட கருத்து. அப்பயனைப் பெறாதோர் சிவனை உணர்ந்தும் உணராதவரேயாதல் பற்றி அவரது செயலுக்கு நீதியிலார் பொன்பெற்ற செயலை உவமையாகக் கூறினார்.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு. -திருக்குறள், 760
என்பதனால் பொன் அறத்தையும், இன்பத்தையும் எளிதின் எய்துதற்கு வழியாதல் அறிக. ``பெற்ற பொன்போல்`` எனப்பொருளுவமம் போலக் கூறினாராயினும், `பொன் பெற்றது போல` எனத் தொழிலுவுமமாகக் கூறுதலே கருத்தென்க. ``சோதி`` என்றது அறிவை. அதனால் தொடர்தலாவது அவனால் பெறும் பயனை அறிந்து அவனைப் பற்றுதல். அறிதல் அதன் காரியமாகிய வழிபடுதலையும், நாடுதல், அதன் காரியமாகிய உண்மை யுணர்தலையும் குறித்து நின்றன. `நாடி` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.
இதனால், சிவனை உணர்ந்தவரும் அவன்பால் வீடு பேற்றினை வேண்டாது, உலகப்பயனை வேண்டி அவற்றை மட்டுமே அடைதல் இரங்கத் தக்கது என்பது கூறப்பட்டது
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage