
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.
English Meaning:
They Dance and Waste Away Their LivesThey unite in Him not,
The Way Guru showed;
They seek Him not,
In aimless talk indulging;
They sing Him not,
His benevolent deeds realizing;
What will they get,
They who dance and waste away?
Tamil Meaning:
சிலர் பெரியோரைக் குரவராக அடுத்து உண்மையைக் கேட்டுணர்ந்தாராயினும் அவர் தங்கட்கு ஒருதலைப் பட உணர்த்திய குறிக்கோளை அங்ஙனமே உணர்ந்து அடைய மாட்டார். `அடைய வேண்டும்` என நினைக்கவும் மாட்டார். குரவர் தம்மை மலம் கழுவித் தூயராகச் செய்த செயலின் அருமையை அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடவும் மாட்டார். ஆயினும் பிறர் தம்மை மதிக்கும்வண்ணம் இனிமை உண்டாகப் பேசுவர். அப்பேச்சுக்கு ஏற்றவாறு நடிக்கவும் வல்லவராவர். அவர் அடையும் பயன்தான் எதுவோ!Special Remark:
`யாதொன்றும் இல்லை` என்றபடி, ``அவன்`` என்றது ஆசிரியனை. `செய்த பரிசறிந்து பாடகில்லார்` எனக் கூட்டுக. ``நயம் பேசித்திரிவர்கள்`` ``ஆடவல்லார்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. ஆடுதல், இங்கு நாடக மாத்திரையால் நடித்தலின்மேற்று.இதனால், பெற்றதனைப் பேணிப் பயன்கொள்ளாமையாகிய பேதைமை நோக்கி இரங்கியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage