
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.
English Meaning:
Vision of Gods in AdharasYou may see Him as Brahma and Vishnu
You may see Him as Rudra blue-throated and Mahesa,
You may see Him as Sakti and Sadasiva
You may see Him within you immanent (in Adharas).
Tamil Meaning:
மேற்கூறியவாற்றால் சிவனை உணர்வோர்க்கு, அவன், `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், சத்தி` என நிற்கின்ற நிலை வேறுபாடுகளும், தனது திருவருளை ஆன் மாக்களோடு ஒற்றித்து நிற்கவைத்து அவைகளை நடாத்துகின்ற முறைமைகளும் நன்குணர்தல் கூடும்.Special Remark:
எனவே, `ஆதார நிராதார தரிசனங்கள் எளிதில் கூடும்` என்பதாம். `இத்தகையோர்க்குக் காலத்தை வெல்லுதல் ஒரு பொருளன்று` என்பது கருத்து. ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின் பின், `அவரை` என்பது எஞ்சி நின்றது.இதனால், காலத்தைக் கடந்தாரது பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage