
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.
English Meaning:
Journey Through Six Adharas in Two StagesUnto the girth of the little finger
Is the spinal cord, taut like the string of bow;
There the adharas are
Traversing the first three
Do you reach the Heart`s Centre
And, be in constancy fixed;
When you journey further onward
To the three Centers that end with Forehead
You shall firm be
Like a picture painted.
Tamil Meaning:
உற்று நினைக்கத்தக்க இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் கையில் சிறுவிரலைப் பெருவிரலோடு சேர்த்து நாண்போல ஆக்க மேல் நிற்கும் ஏனை மூன்று விரல்களைப் போல, இருதயத்தில் வேறு வேறு நிற்கும். பின்பு தலையில், `புருவநடு, நெற்றிநடு, உச்சித் துளை` என்னும் மூன்றிடங்களிலும், அதன்பின், தலைக்குமேல் `சூரியன், சந்திரன், அக்கினி` எனப்படும் மூன்று மண்டலங்களிலும் வேறு வேறாய் நில்லாது ஒன்றியேவிடும்.Special Remark:
எனவே, அவற்றை உன்னி உணரும் உணர்வும் அவ்வாறாதல் போந்தது. இவ்வாறு உணர்வு அலையாது நிற்றலால் உடம்பும் நிலைக்கும் என்க. ``சிறுவிரல் நாணாக`` என்றது, ``காள கர்ணி`` என்றும், ``திரிசூலம்`` என்றும் சொல்லப்படும் முத்திரையைக் குறித்தவாறு. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடி களும் இருதயத்தில் அம்முத்திரைபோல நிற்கும் எனவும், ``சேரவே`` என்றதனால், `ஆஞ்ஞை முதலிய இடங்களில் ஏனை இரு நாடிகளின் ஆற்றலும் சுழுமுனையில் ஒன்றிவிடும்` எனவும் உணர்க. ``சென்னியில் மூன்று`` என்றது, `இரட்டுற மொழிதலாய்` நின்று இவ்வாறு பொருள் பயந்தது. ஓவியம் போல்வனவற்றை ஓவியம் என்றே ஆகுபெயராக ஓதினார். ``ஒத்திடும், நின்றிடும்`` என்பன முற்றுக்கள். உன்னி உணர்தல் - அறிவுடையதாதல். ``ஓவியமாய் விடும்`` என்றது, உடம்பை, இங்கு அதிகாரப்பட்டது அதுவே யாகலின். உடம்பு ஓவியமாதல், காலக் கழிவால் மாறுபடாது, என்றும் இளமையோடிருத்தல்.இதனால், `யோகத்தின்வழி உணர்வு ஒருங்குதல் காலத்தை வெல்லும் வழியாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage