
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.
English Meaning:
Collective Vision of Mandalas End KarmaThe Yogi who through the spinal column
Ascends the adharas above
Sees the Mandalas Three together, rapture bound;
Those who saw that vision
Saw the end of Karmas;
Those who saw that not
Die to be born again.
Tamil Meaning:
மேற்சொல்லியவாறு புண்ணியத்தண்டின்வழிச் சென்று உணர்வைப் பிரமரந்திரத்தில் வைத்த யோகிக்கு உடலில் `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் மூன்று மண்டலங்களும் தக்கவாறு அமைந்திருக்கும். ஆகவே, உடல், காலத்தால் வாதிக்கப் படாதாம். இந்நிலையைக் கண்டவர், உடல் கால வயப்படாது நிற்கும் பயனைக் கண்டனர். காணாது வேறு உபாயங்களில் சென்றோர், உடல் கால வயப்பட்டு நீங்க, அதனைக்கண்டு துன்புறுகின்றார்கள்.Special Remark:
மேல், ``பாவிகள் இத்தின் பயனறிவாரில்லை`` என்றதனால், `கண்டவர் கண்டனர்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``பிரிய`` என்றதும், `பிரியும் நிலையை எய்த` என்றதாம். இனி, ``பந்தல் பிரிந்தது`` (தி.10 பா.151) என்றாற்போல, `கட்டுக் குலைந்தது` என்றலுமாம்.இதனால், `உணர்வு ஒன்றுதல் காலத்தை வெல்லும் உபாயம் ஆமாறு இவ்வாறு` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage