
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும்
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே.
English Meaning:
God is Beyond Adharas and TattvasBeyond the Muladhara of the four pointed Centre is He;
Beyond the barriers of Tattvas twenty and four is He;
Beyond the twenty and five Tattvas is His Guna
Beyond the six adharas that rise like the spreading banyan tree is He,
Who ever does know Him!
Tamil Meaning:
ஒருவன் பிறந்து நான்கு ஆண்டுகளைக் கடந் தானாயின், பின்னும் நான்கு நான்கு ஆண்டாக இருமுறை கடத்தல் வேண்டும். இனி, ஐந்து ஆண்டுகளைக் கடந்தானாயின், அப்பால் பின்னும் பத்து, பதினைந்து என்னும் ஆண்டுகளைக் கடத்தல் வேண்டும். எனவே, நான்கு, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினைந்து என்னும் ஆண்டுகள் வாழ்நாள் இடையறும் காலமாகும் என்பது அறியப்படும். பதினைந்து யாண்டு வரையில் ஒருவன் யோகத்தைத் தொடங்க இயலாது. ஆகவே, அதுகாறும் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளுதலும் இயலாது. அதனால், இவ்வாறு, பிறந்து, ஆண்டுகள் பலவாக வளர்கின்ற உடம்பினை, உடம்பினை உடைய தாகாத தன்மையுடைய ஒரு பொருளால் அருள்புரியப்பட்டு மேற்சொல்லிய ஆறு இடையறவுகளையும் (கண்டங்களையும்) கடந்த ஓர் அருமையை அறிகின்றவர் உலகில் யார் உளர்!Special Remark:
``அறிவாராயின், பதினாறாவது வயது முதலாகவே அப்பொருளை அடைதற்கு யோகம் முயல்வர். அதனால், காலத்தைக் கடந்து, என்றும் பதினாறாண்டாகவே இருக்கும் பயனையும் பெறுவர்`` என்பதாம். மார்க்கண்டேயரது வரலாறு இங்கு நினைவு கூரத் தக்கது.நான்கு முதலியன, அவ்வளவினவான ஆண்டுகளைக் குறித்தன. ``கடந்தது`` இரண்டும், ``கடந்ததேல்`` என்னும் பொருள தாகிய முற்றெச்சங்கள். `வரும்` என்றது, `கடத்தற்கு அரிதாய் வரும்` என்றவாறு. இதனைப் பின் வந்த, `நால், பத்து, பதினைந்து` என்பவற் றோடும் கூட்டுக. பாலனாம் தன்மை தமிழில், ``பாலம்`` என நின்றது. குணம் உடையதனை, குணமாகக் கூறினார். இனி, ``சிவன்`` எனத் தோன்றா எழுவாய் வருவித்து உரைத்தலும் ஆம். ஆண்டு - ஆளப் பட்டு. ஆலம் - நஞ்சு; என்றது நஞ்சு போலும் ஆண்டெல்லைகளை.
இதனால், காலசக்கரத்தின் கொடுமையை விதந்து, `அஃது உணர்ந்து, காலம்பெற, யோகத்தைத் தொடங்குக` என்பது கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage