
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே.
English Meaning:
Days Appropriate for Commencing YogaThe birth day, The first, second, third and the eight day following it,
Any one of these is day appropriate for commencing yoga;
Find the day suitable most,
And easy shall be your entry
Into the Mystic House within.
Tamil Meaning:
பிறந்த நட்சத்திரமும், அதனோடு ``இரண்டு, நான்கு, ஆறு`` என்பவற்றைக் கூட்ட வருகின்ற ``மூன்று, ஐந்து, ஏழு`` என்னும் எண்ணுமுறைக்கண் வருகின்ற நட்சத்திரங்களும் ஒழித்து மற்றைய நட்சத்திரங்களிலே, இல்வாழ்க்கைக்குரிய யாதொரு செயலையும் தொடங்குதல் பொருந்தும்.Special Remark:
பொருந்துதல், அச்செயல் பற்றி நிகழும் நாள்கள் பலவும் பயன் தரும் நாளாதற்கு ஏதுவாதல். எனவே, விலக்கப்பட்ட நட்சத்திரங்களில் தொடங்கினால் அந்நாள் வீணாகக் கழியும் என்க. இதனானே, யோகியர் யோகம் தொடங்குதற்கு உரியநாளும் இங்கு ``ஆம்`` எனப்பட்ட அவையே என்பதும் கூறியவாறாம். ஒன்று - கூடுகின்ற. ``இருமூன்று`` என்பதில் ``இரு`` என்பது முன்னும் சென்று இயையும். அதற்கேற்ப ``இரண்டு`` என்பதும் இருமுறை ஓதப்படும். ``எட்டு மூன்று`` என்பது பாடம் அன்று. ஒருவன் பிறந்த நட்சத்திரம் முதலாக இருபத்தேழு நட்சத்திரங்களையும் ஒன்பது ஒரு கூறுபடுத்து மூன்று கூறாக வகுக்க. மூன்று கூற்றிலும் முதலில் உள்ள நட்சத்திரங்கள் முறையே ``சென்ம நட்சத்திரம், அனுசென்ம நட்சத்திரம், திரிசென்ம நட்சத்திரம்`` எனப்படும். அவை மூன்றும் ஆகா என்பது வெளிப்படை மற்றும் அம்மூன்று கூறுகளிலும், `மூன்று ஐந்து ஏழு` என்னும் எண்ணு முறைமைக்கண் நிற்கும் நட்சத்திரங்களும் ஆகா என்பதும், ``இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது`` என்னும் எண்ணுமுறைமைக்கண் நின்ற நட்சத்திரங்கள் ஆகும் என்பதும் இங்குக் கூறப்பட்டன. நட்சத்திரங் களை இவ்வாறு அறிதலை, `தாரா பலன் பார்த்தல்`` எனச் சோதிட நூல்கள் கூறும். அதனை வாழ்நாள் பற்றிய ஆராய்ச்சியில் இங்கு நாயனார் கூறினார் என்க. `மனை` என்றது மனைவாழ்க்கைக்குரிய செயலைக் குறித்த ஆகுபெயர்.இதனால், கால சக்கரத்துள் நன்மை தரும் பகுதிகள் சில கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage