
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும்
கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே.
English Meaning:
Life Wasted Away in Pursuit of Worldly KnowledgeKnowledge that comes of senses five,
Knowledge that comes of discrimination that is sixth
Knowledge that comes of judgement that is seventh
Knowledge that comes of by learning that is eighth,
Knowledge that comes from experience that is ninth
Knowledge that comes from attachment that is tenth
—Thus does knowledge that comes in diverse ways,
But erode life span in succession;
Knowing this not, they perish away.
Tamil Meaning:
உடற் கூற்றால் ஐம்புலன்களை ஐம்பொறிகள் பொருந்திப் பொதுவாக அறிகின்ற ஐந்தினாலும், பொறிகள் பொதுவாக அறிந்தவற்றை மனம் முதலிய உட்கருவினைப் பற்றி நின்று சிறப்பாக அறிகின்ற நிலையில் அந்த ஆறினாலும், மனம் சிறப்பாக அறிபவற்றில் உயிர் அழுந்தி நிற்கும் நிலையில் அந்த ஏழினாலும், உயிர்க்கு உறுதி தேட எண்ணி நூல்களைக் கற்கும் நிலையில் அந்த எட்டினாலும் கற்றவற்றை அநுபவமாக உணரும் நிலையில் அந்த ஒன்பதினாலும், அநுபவமாக உணர்ந்த நூற் பொருளைக் கடைப்பிடிக்கும் நிலையில் அந்தப் பத்தினாலும் இவ்வாறு பலவகைத் தொழிலால் உடலிற்கு அளந்த நாழிகை, கழிந்தது தெரியாமல் கழிந்து போவது இரங்கத்தக்கது.Special Remark:
புலனுணர்வில், ஒரு காலத்திலே ஒரு பொருளின்கண் ஐம்புலன்களையும் உணர்தல் சிறந்ததாகலின், காலக்கழிவை ஐந்தின் மேல் வைத்தே கூறினார். `ஒருகாலம்` என்றல் விரைவு பற்றியாதலின், ``ஐந்து`` என்றது மலைவாகாமை அறிக. ``ஐந்து`` முதலியவற்றில் ஆன் உருபு விரிக்க. `இப்பலவகை` என்னாது, ``பல வகை`` என்றே கூறினமையால், `இவ்வாறு பலவகையால்` என்பதே பொருளாயிற்று. ஆகவே, ஒன்றனையும் அறியாது அறியாமையுள் அழுந்துதலாலும் காலம் கழிதல் பெறப்படும்.இதனால், உடலிற்கு அளந்த காலம் ஒழிவின்ற உருண்டோடு கின்றமையும், அவ்வோட்டந்தான் பல்வேறு வகையினதாதலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage