
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடும் முப்பதுஞ் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே.
English Meaning:
God Vision at the End of 33 Days of YogaCountless are the gains that flow
From single-minded meditation;
Hear yet;
And thus if for Three and thirty days
You well and deep meditate
The Dancer on top of the Mountain of Gold
Will appear,
And You one with Him become.
Tamil Meaning:
மேற்கூறியவாறு சிவன் வேறின்றி நிற்கப் பெறின். உளவாகும் நன்மைகள் அளவில. அதனைப் பெறும் முறையை, `நன்மை பயக்கத் தக்கது` என்று உணர்ந்து இப்பொழுது கேட்பாய். `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளிலும் ஒன்றில் பத்துநாள் பிராணன் இயங்குதல் யோக முறையாகும். மூன்று நாடிகளிலும் முப்பது நாள்கள் முறையாக அஃது அங்ஙனம் இயங்குமாறு ஒருவன் யோகத்தில் நின்றால்,மேரு மலையில் விளங்கும் சிவனாகவும் ஆய்விடுவான்.Special Remark:
மூன்றுக்கு - மூன்றின்வழி இயங்குதற்கு. செய்யுளில் சுட்டுப் பெயர் முன்வந்து, பின்னர் வரும் முப்பதைக் குறித்தது. ``சென்றிடும்`` என்றது, `செல்லுதல் இயல்பு` என்னும் பொருட்டாய், `அதுவே நெறி` என்பது உணர்த்திற்று. சேர - அம்முறையில் பொருந்த. `பொன்திகழ் குன்றிடை` என மாற்றிக்கொள்க. கயிலை, `மேரு` எனவும்படும். சுழுமுனை நாடியையும், `மேரு` எனக் கூறும் யோக நூல்கள். இங்கு, அதனையும் கொள்க.இதனால், உள்ளே பார்த்திருத்தற்கு ஆவதொரு முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage