
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பாவலும் ஆமே.
English Meaning:
Seek Himself as YourselfHimself as Lord
In all things, He alone is;
Himself is Yourself
Thus you seek Him;
The very Heaven is He in this vast earth;
Sweet is He;
May you Him adore.
Tamil Meaning:
வேதமாய் இருப்பவனும் சிவனே. வேதத்தைச் செய்தவனும் சிவனே. இனி வேதமும் இயல்பாகவே அவனையே, `முடிநிலைப் பொருள்` எனக் கூறி முடியும். ஆகவே, ஆகாயத்திற்குள் அடங்கியிருக்கும் உலகம் அனைத்தினுள்ளும், `ஞான சூரியனாய் உள்ளவன் சிவன் ஒருவனே` எனப் புகழ்ந்து பாடி அவனை அடைதலே தக்கது.Special Remark:
முதலில் உள்ள, `தான்` சிவன் என்பது, அதிகாரத்தால் விளங்கிற்று. `இருக்கு` என்பது பொதுப்பட அனைத்து வேதங் களையும் குறிக்கும் பெயராயும் வரும். இரண்டாம் அடியில் ``இருக்கும்`` என்னும் உம்மை சிறப்பு. அவ்விடத்து, ``தானே`` என்றது `இயல்பாகவே` என்றபடி. ``அவன்`` என்பதன்பின் `முடிநிலைப் பொருள்` என்பது எஞ்சி நின்றது. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. `வானின் உள்ளாய் இருக்கும்` என உருபு விரிக்க. `சான்றோராவார் வேதாகமங்களின் வழி நிற்பவர் ஆகலான், எவ் விடத்தும் சிவனையே ஞான மயமான மெய்ப்பொருளாகப் போற்றி வணங்குதலே சான்றோராயினார்க்கு உரிய இயல்பு` என்றபடி. `பானுவாய்` என்பதில் ஈற்று உகரம் குறைந்து, `பானாய்` என வந்தது.இதனால், `வேதாகம வழக்காகிய சான்றோர் சென்ற நெறிப்படி உயிர்களுக்குள்ளே ஒளி வளர் விளக்காய் ஒளிர்பவன் சிவனே` என உணர்ந்து அவனைக் கண்டு இன்புறல் வேண்டும்` என்பது கூறிமுடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage