
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.
English Meaning:
Lord`s Light and Jiva`s Light Merge WithinThe Light within is but Jiva;
The Lord too who stood within was a gemly Light Effulgent;
Flashing as lightning in the astral sphere,
That Light with Sakti`s Light and Jiva`s Light into one merged.
Tamil Meaning:
பிறிதோர் ஒளியைத் தன்னுட் கொண்டிருக்கும் ஒளியாவது எந்த ஒளி? உடலினுள்ளே ஒளியாய் நிற்கும் சீவ ஒளியாம் அந்த ஒளிக்குள் ஒளியாகி நிற்கும் வன்மையை உடைய பெரிய மாணிக்க ஒளியாகிய சிவனஅ, தன்னைக் காணும் பக்குவம் எய்தினார் கண்முன் முதற்கண் திடீரென விளங்குகின்ற மின்னல் ஒளிபோல மின்னிப் பின்பு பரவெளியிலே ஒன்றி அதுவாகி, பேரொளியைப் பெற்ற திருக்கூட்டத்துள் நீங்காது நிற்பான்.Special Remark:
``உளம் கொளி`` என்பதில் கொள்வதும், கொள்ளப்படுவதும் ஒளிகளாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. அதனால் ``மாமணிச் சோதி`` என்பதும் ``விளங்கொளியாய் மின்னி`` என்பதும் பொருந்துவவாயின. வளம், ஒளிக்கு ஒளியாய் நிற்கும் செழுமை. இங்கும் அலங்கொளி அளங்கொளியாயிற்று.இதனால், சிவ ஒளி பக்குவம் எய்தினார்க்கு வெளிப்பட்டு விளங்கிப்பின் மறையாது நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage