
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

`உண்டில்லை` என்னும் உலகத் தியல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
English Meaning:
Even Sceptics Can Reach that Light if they Seek in Devotion``God there is; God there is none``
Thus the men of world diverse hold;
Will they who hold ``Primal there is none,``
Ever reach Siva State?
Even they who say, ``We saw not God``
If in devotion stand,
He as Light Effulgent in them is;
He the Light of Astral Sphere (Chidambaram) within.
Tamil Meaning:
உலகம், சிலர் சிலவற்றை `உண்டு` எனக் கூறினால், உடனே அவற்றை `இல்லை` என மறுத்துக் கூறும் இஃது உலகத்தின் இயல்பு ஆதலை எளிதில் காணுதல் கூடும். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு, எளிதில் அகப்படுகின்ற பொருள் பற்றியே இவ்வா றாதலின், `காலம், இடம் இவற்றைக் கடந்த, `முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் உண்டு`8 என அறிந்தோர் கூறுவதை, உலகம் `இல்லை` எனக் கூறிப் பிணங்குகின்றது இவ்வுலகத்திற்கு `மேற்கதி` என்பது உண்டாகுமோ! உண்டாகாது. அந்த முன்னைப் பழம்பொருளை மக்கள் கண்டதில்லை. ஒரு சிலர் கண்டனரேனும், அவர் `அதன் இயல்பு இது` என விளக்கிச் சொல்லியதில்லை. `மற்று அதன் இயல்புதான் யாது` எனின், புறக்காட்சியை விடுத்து அறிவிற்குள்ளே ஒற்றித்துக்காணும் அகக்காட்சியில் விளங்குகின்ற ஓர் அதிசய விளக்கொளியாகும் அது.Special Remark:
`பண்டு` என்பது இடைச் சொல்லாயினும் பெயர்த் தன்மைப் பட்டு ஆகுபெயராய்ப் பண்டையதைக் குறித்தது. `கண்டது, விண்டது` என அவ்வத்தொழில் மேல் நிற்கும் வினைப் பெயர்களில் அகரச் சாரியையும், துவ்விகுதியும் தொகுத்தலாயின. `கண்டவர் விண்டில, விண்டவர் கண்டிலர்` என்பது ஒரு பழமொழி. விள்ளுதல் - விளக்கிச் சொல்லுதல். `உண்மை மாத்திரையாற் சுட்டப்படுமே யன்றி, இலக்கண வகையால் விளக்கிச் சொல்லுதல் இயலாது, அநுபவித்து அறியத் தக்கது` என்பதாம். இதனை,``மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லெனின் சொல்லுமா றெங்கனே``
எனப் பின்னர் நாயனாரும்,
``இங்ஙனம் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்;
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``9
எனவும்,
``அன்றுமுதல் ஆரேனும் ஆளாய், உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்!
அவ்வா றிருந்த தது``l
எனவும்,
``மருவி இருவரும் புணர வந்த இன்பம்
வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்``3
எனவும் பின்னை ஆசிரியன்மாரும் கூறுமாற்றால் உணர்க. இங்ஙன மாதலின், `முன்னைப் பழம்பொருள்` என்பது சூனியம் போலும் என மலையாமைப் பொருட்டு, ``உள்ளே விளக்கொளியாமே`` என்றார்.
இதனால் `சிவ ஒளி பேரொளியாதலுடன் உள்ளொளி நுண்ணொளி` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage