
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.
English Meaning:
When the Lights of Siva and Sakti Blend in Jiva LightAs like the Light of Lord
That in Him reposes;
Is the Light of His Sakti Grace,
When the three lights Sun, Moon and Fire
Within shines by Yoga Way,
The Lord, indeed, nears you,
As one Light in your inner Light.
Tamil Meaning:
பிறிதொரு பொருள் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளி எந்த ஒளியோ அந்த `ஒளியே சிவன்` எனப்படும் பொருள். (எனவே, விளக்கினால் விளக்கும் ஒளி எந்த ஒளியே சீவன்` எனப்படும் பொருள் என்பது தானே விளங்கிற்று.) இனி, ஞாயிறு, பிறரால் காணப்படுதற்கு ஏதுவாய் அதனினின்றும் வியாபிக்கின்ற அதன் கதிர்போன்றது சிவனது சத்தி. ஆக, விளக்கம் உடைய ஒளிகள் மூன்றாகும். அவற்றுள் பேரொளியாகிய சிவன் தன்னை நினைக்கின்ற உயிரினது நெஞ்சத்தில் வெளிப்பட்டு அதனது ஒளியைத் தனது ஒளிக்குள் அடக்கி விளங்குவான்.Special Remark:
``இலங்கியது`` என்றது, `தானே இலங்கியது` என்றபடி. தூங்குதல், நீக்கமின்றியிருத்தல். இதனுள் இன வெதுகை வந்தது.இதனால், சிவ ஒளி சீவ ஒளிக்கு உதவும் ஒளியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage