
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

விளங்கொளி யான விகிர்தன் இருந்த
துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.
English Meaning:
Dancing in the Darkness of Pasa, Siva Light Enters Unmana SaktiThe Lord that is Light Effulgent,
Entering the dark arena of Pasa
Dances as Light in that darkness;
As the Forehead-Eyed God thus dances,
He as Light Effulgent in Unmana Sakti merged.
Tamil Meaning:
தானே விளங்கும் ஒளியாகிய சிவன் விளங்கி நின்ற மெலியப்பெற்ற சீவ ஒளியின் உடல் பொறி காரணங்களில் முன்பு சேர்ந்திருந்த ஆணவ இருள் சேரமாட்டாது ஒதுங்கியிருக்கும். அவ்வாறு அந்த இருள் மெலிதற்குரிய அதிசூக்கும நடனத்தைச் செய்து கொண்டு தன்னை நினைக்கின்ற உயிரின் நுண்ணுடம்பில் முடிநிலைத் தானமாகிய உன்மனாந்தத்திலே இருப்பான்.Special Remark:
விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன். ``பாசம்`` என்றது இங்கு மாயேயத்தை, அதனானே அதனைப் பற்றுக் கோடாகக் கொள்ளும் வினையும் பெறப் பட்டது. `இருள் கலங்கு நட்டம்` என மாற்றியுரைக்க. அது ஞான நடனம். உன்மனை பற்றிக் `கலைநிலையில்` காண்க.l உயிரை ஆணவம் பற்றியுள்ள பொழுதே அதனை `மாயை, மாயேயம், வினை` என்பவற்றையும் இருள் பற்றி உயிரை ஆணவம் பற்றாது நீங்கிய பொழுது அதன் மாயை முதலியவற்றையும் ஆணவம் பற்றாது; அதற்குக் காரணம் திருவருள் விளக்கமே என்பதை,``மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்,
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``*
என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறிக. மூன்றாம் அடி இன எதுகை. `சேராது` என்பது ஈறு குறைந்து நின்றது. `உன் மனாந்தத்து` என்பது `உன் மனத்து` என இடைக் குறைந்து நின்றது.
இதனால் சிவ ஒளியால் சீவ ஒளி உடம்பொடு நலம் பெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage