
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.
English Meaning:
Jiva then Blossoms as Divine FlowerIn the Heavens stood Lord;
The Celestials, too, stood there;
Yet they knew Him not,
And bewildered ever stand;
When Pasa`s desires
And the odour of Karma Past
Together leave,
The Jiva as a Flower of Divine blossoms.
Tamil Meaning:
உள்ளத்துள்ளே உள்ளொளியாகிய சிவனும் இருக்கின்றான். கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவர்களும் இருக்கின்றார்களும். இருப்பினும், அவர்கள் ஒளி தம்மிடத்தில் சிறிதும் இல்லாததுபோல, `ஒளி எங்கே உள்ளது` எனத் தேடித் திகைத்து, `சிவனே! சிவனே` என ஓலமிடுகின்றனர். அதற்குக் காரணம், ஆணவமாகிய ஒரு பாசம் முதலிலே பற்றியிருக்க, அது காரணமாக வகையால் இரண்டாய், விரியால் அளவிறந்தனவாகிய வினைகள் வந்து பற்றியிருப்பதேயாம். ஆகவே, அவர்களது செயல், மலர் இருந்தும் மணம் கமழாதது போன்றதாகும்.Special Remark:
`தேசு` என்பது, `தேசம்` என அம்முப்பெற்று வந்தது. தேசு - ஒளி. இன்றி - இல்லாதது போல. `பற்றற` என்பது பாடம் அன்று. ``வாசம், ஒன்றாமலர் போன்றது`` என்றலே கருத்தென்க. `மலர் உயிரும், மணம் சிவமும்` என்க.``பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்,
சீவனுக் குள்ளே சிவணம் பூத்தது``3
என முன்னரும் கூறினார். இதனை,
``உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். உயர் பிறப்பினராகிய தேவர்களைக் கூறவே மக்கள் நிலை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `சிவன் உள்ளொளியாய் இருந்தும் பாசப்பற்றால் விளங்கிலன்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பாசம் பற்று அற்றால் விளங்குவன` என்பது சொல்லாமே அமைந்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage