
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருதது மாமே.
English Meaning:
Divine Light Devours Soul`s DarknessLuminous is that Light;
It is Light that devours Soul`s darkness;
It is Light of those who adore Him in Jnana Light;
He devours the poison that with ambrosia arises
From the milky seas
And holds it in His throat ever;
Like it, is His Light too.
Tamil Meaning:
சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் விளங்குகின்ற தனது ஒளியை, எல்லா இருளிலும் மேலானதாய் மிக மறைக்கின்ற ஆணவ இருளின் வலிகெடுதற்கு ஏதுவான ஒளியாக உடையவன். அவ்வொளியை அவன் எவ்வுயிரிடத்தும் மறைத்தல் இல்லை. ஏனெனில், விளங்கும் ஒளியுடம்பினராகிய தேவர்கள் அமுதம் உண்டற்பொருட்டு நஞ்சம் நிறைந்த கண்டத்தையுடைய அவனது திருவுள்ளம் அத்தகையது.Special Remark:
``ஈசன்`` என்பதே முதலிற் கொள்க. ``விளங்கொளி யாகிய அவ்வொளியைத் துளங்கொளியாக உடையான்` என்க. அவ்விருள் - ஒளிகளின் மேலான ஒளிபோல, இருள்களின் மேலான அந்த இருள். அஃது ஆணவ மலம்.``ஒரு பொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``9
என ஆணவ இருளின் கொடுமை மிகுதி கூறப்படுதல் காண்க. துளங்குதல் - பெரிதும் மெலிதல். ஆணவம் அநாதியாதலின் அழியாது சத்தி மெலிந்தே நிற்பதாதல் பற்றி, `துளங்குதல்` என்றார். அலங்குதல், `அளங்குதல்` என மருவி வந்தது. தொழுவார்க்கும் என்ற உம்மையால், `தொழாதார்க்கும்` என்பது கொள்ளப்பட்டது. ஒளியான் - கரவான். அது - அத்தன்மையது. அஃதாவது உயிர்கள் ஒளியைப் பெறத் தான் இருளைத் தாக்கி அடக்கும் தன்மை.
``சிற்றுயிர்க் கிரங்கிக் - காய்சின ஆலம் உண்டாய்
அமுதுண்ண``3
``விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு
விடம் உண்ட
கண்ணாளா``
என்பனபோலும் திருமொழிகளைக் காண்க.
இதனால், பிற ஒளிகளால் நீங்காத கொடிய திணியிருளை நீக்குகின்ற செவ்விய நுண்ணொளியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage