
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசி
உடலுறு ஞானத் துறவிய னாமே.
English Meaning:
He Who Receives Siva`s Light Becomes JivanMukta, Rid of Mayaic Darkness
The light Effulgent that glows atar
Is the Lord that spreads His beams as like the Sun;
When He the Maya`s darkness dispells,
Jiva in this body, a Jnani-Renunciate becomes (Jivan Mukta).
Tamil Meaning:
உலகத்தில், விளக்கு முதலாய் நிற்க, அதினின்றும் வியாபிக்கின்ற ஒளி இருந்தும் இல்லையாய்ப் போகும்படி தோன்றி விளங்குகின்ற ஞாயிறு போன்றவன் சிவன். ஆகவே, உடல், பொறி, உலகு நுகர் பொருள்களாய்ப் பல்வேறு வகைப்பட்டு நெருங்கி யிருக்கின்ற மாயா கருவிகள் செய்யும் மயக்கத்தை அடக்கி, அதற்கு மாறான ஞானத்தினால் உயிர்களோடு உறவுகொள்பவன் அவன்.Special Remark:
`அஃதறிந்து, கருவி ஞானத்தை நீக்கி, அவனது ஞானத்தை நாடிப்பெறுக`` என்பது குறிப்பெச்சம். ``ஆங்கு`` என்றது, `அங்து நின்றும்` என்றபடி. படர்தல், இங்கு நீங்குதல். படர் உறு காட்சிப் பகலவன் படர்தற்கு ஏதுவாய் உறுகின்ற காட்சியையுடைய பகலவன். ``மாயை`` என்றது, மாயையின் காரியத்தை. இன், சாரியை மயக்கத்தை ``இருள்`` என்றார். மயக்கத்திற்கு ஏது அதுவாகலின். வீசுதல் - போக்குதல். உடலுல் - மாறுபடுதல். ``உறவியன்`` என்பதில் அன் ஆடூவை அறிவித்தற்கு வந்த விகுதிமேல் விகுதி.இதனால், `மேற்கூறிய அக விளக்கைக் காணுதல் அதன் ஒளியாலல்லது, பிற ஒளிகளால் ஆகாது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage