
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.
English Meaning:
The Little Light Within Points to the Effulgent LightThe Effulgent Light stands as a sparkling light concealed
That ever to the shining Lord points;
It is the light of the heart;
It is the rich light that within the body pulsates Pervading all,
—Thus did the Lord as Light stand.
Tamil Meaning:
சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் மிக விளங்கு கின்ற ஒளியாய் இருப்பினும் தன்னை நினைக்கின்றவனது உள்ளத்தில் மட்டுமே விளங்கி நின்று, உடலிலும் உயிர்ப்பாய் இயங்குகின்ற வண்மையுடையவனாயும், மற்றை எல்லாப் பொருள்களிலும் மேகத்தில் ஒரே ஒரு காலத்தில் மட்டுமே சிறிது விளங்கி விரைவில் மறையும் மின்னல்போல மறைந்துள்ளவனாயும் இருக்கின்றான். ஆகையால் அவனை ஈங்கள் இடைவிடாது துதியுங்கள்.Special Remark:
`துதித்தால் உங்கள் உள்ளத்தில் விளங்கி, உடலில் உயிப்பாயும் இயங்குவான்` என்பது குறிப்பெச்சம். `துலங்கொளி` என்பது எதுகை நோக்கி, ``துளங்கொளி`` எனத் திரிந்து நின்றது. `ஈசன், உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற வளங்கொளியாய், எங்கும் விளங்கொளி மின்னொளியாகிக் கரந்து மருவி நின்றான். (அவனை) எப்போதும் சொல்லும் என இயைத்து முடிக்க. முதல் அடியில் உள்ள ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``உளம் கொளி`` என்பது, சாதியொருமை.இதனால், பேரொளியாகிய சிவன் தன்னை நினைப்பவரது நெஞ்சில் மட்டுமே விளங்கி நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage