
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
பதிகங்கள்

மலமென் றுடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.
English Meaning:
Lord is in Body, do no Despise itDumb fools are they
Who as Mala (Impurity) despise the body;
Other places as holy
They go about seeking;
They who consider ``Good this is``
And in it seek the Lord,
Shall experience macrocosm entire,
In their body tenacious
(That miscrocosm is. )
Tamil Meaning:
அறிவுடையீர், தம் உடம்பை அருவருத்து நீக்கத் தக்கதாக அறிவும் அறிவையில்லாதவர் அதனையே தாம், என்றும் இருக்கும் இடமாகக் கருதி, அதன்கண் தனியான ஒருபற்று வைத்துப் போற்றிவருதலைக் கண்டீரன்றோ! அவர் நிலையை அடைந்திருக்கும் உயிர்கள் அதன் பயனாகப் பற்பல தூல தேகங்களை எடுத்து உலகங்களிலேயே உழலும்.Special Remark:
`வீடு பெறா` என்றபடி. `இருக்கின், பற்றும்` - என்னும் பயனிலைகட்கு, `அத்தகைய உயிர்கள்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `கண்டீர்; பற்றும்` எனக் கூறியவற்றால், `நீவிரும் அவ்வாறு நிற்பின் அந்நிலையை அடைவீர்கள்` எனக் குறித்தவாறு.இதனால், `உடம்புகள் யாவும் அழுக்குப்பொருளே` என்பதும், அஃதறிந்து அவற்றின் நீங்குதலே அறிவுடைமை` என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage