
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
பதிகங்கள்

இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே?
English Meaning:
Gross BodyLymph, blood, flesh, skin, and tendons,
Bones, marrow, fat, brain and semen,
—Of these into one shape made
Is the body gross,
By sorrow harassed.
Tamil Meaning:
நிலையாய் இராமல் நிலையழிந்து ஒழிந்து போவன வாகியகுருதி, இறைச்சி முதலிய அழுக்குப்பொருள்களாம் பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும்?Special Remark:
`கூடாது, அதனால், இருவகை இந்திரியங்களும் ஆற்றலேயாயினும் அவை செவி, தோல் முதலிய உறுப்புக்கள் இன்றிச் செயற்படுதல் கூடாமையால், அவை தூல உடம்பே யல்லது சூக்கும உடம்பாகா` என்பதாம்.இரதம் - இரசம்; அஃதாவது, உண்ணப்படும் உணவிலிருந்து ஊறிக் குருதி முதலியவாய்ப் பரிணமிப்பது அதுவே, குருதி முதலியன நிலைபெறுதற்குத் துணையாதல் பற்றி முதற்கண் கூறப்பட்டது. மேதை - நிணம். `கொழுப்பு` என்பர். அத்தி - அஸ்தி; எலும்பு. வழும்பு - நிணத்தில் உள்ள பசை. இதனை நிணத்திற்கு வேறாக எண்ணுதல் இல்லை. மச்சை - பித்த நீர். இங்குக் கூறப்பட்டவற்றுள் இரதம் வழும்பு இவை தவிர ஏனைய ஏழும் `தாதுக்கள்` எனப்படும். தாது - மூலப்பொருள். பாழாதல் - காணந்தோறும் பதனழிந்து, முடிவில் அழிந்து போதல். தாதுக்கள் யாவும் அத்தன்மையவே யாதல் பற்றி, `பாழாம் உபாதி` எனவும், இவ்வுபாதிகள் யாவும் பருப் பொருள்களாய்க் கட்புலனாவனவே` என்றற்கு `உருவம்` எனவும் கூறினார். உபாதி - மாசு. `இரதம் முதலியவாகக் கூறப்பட்ட செவ் வெண்ணின் இறுதியில் தொகைச் சொல் தொக்கது. ஏகாரம் வினாப் பொருளாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், மேல், `சூக்கும உடலன்று` எனக் கூறப்பட்டவை தூலதேகமே யாதல் காரணம் கூறி வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage