
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப்
பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று
துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.
English Meaning:
Know Lord and Be in BlissKnow Our Lord,
And in bliss be;
Be filled with love;
Perform Tapas;
Perfect Jnana True;
You, who has laboured hard,
In worldly pursuits,
Of miserable Pasa entangled.
Tamil Meaning:
மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து உழல்வதாகிய அந்தத் தொழிலிற்றானே நின்று, அத்துன்பத்தை அடைதற்கு ஏதுவான வினைகளில் கிடந்து உழைத்துக் கெட்டவர்களே, கேளுங்கள். எம் இறைவனாகிய சிவன் எல்லா உயிர்கட்கும் என்றும் உறுதுணையாய் இருந்து உதவி வருதலை உணர்ந்து அவனிடத்திலே அன்பு செய்யுங்கள்; அதன் மேலும் தவத்தைச் செய்யுங்கள்; அப்பொழுது உண்மை ஞானத்தைப் பெற்ற சிறப்பை உடையவராவீர்கள். அச்சிறப்பால் நிலையான இன்பத்தை எய்துவீர்கள்.Special Remark:
``பிறவித் தொழிலே நின்று`` என்பது தொடங்கி, `இன்புறுவீர்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தவமாவன சரியை கிரியா யோகங்கள். அது சிவநெறி நூல்களால் இனிது விளங்கும்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage