
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.
English Meaning:
Seek the Holy Path of HaraThink of Him
As far as your thoughts go;
Speak His truth
As far as you can;
``Lord,`` they may say, ``He is not,``
Very much He is, everywhere;
Seek the Holy Path
Of Hara that is ever good.
Tamil Meaning:
நாங்கள், `ஒருகாலத்திலும் பிறத்தலும், இறத்தலும் இல்லாதவன், எல்லாவற்றையும் அறிந்தவன், எல்லா உயிர்களிடத்தும் காரணம் இல்லாமலே இரங்குகின்ற பேரிரக்கம் உடையவன்\' என்பன போலச் சொல்கின்ற அப்படிப் பட்ட முதல்வன் ஒருவன் இல்லை; இருக்க இயலாது\' என்று சிலர் முரணிக் கூறுவராயினும் அப்படிப்பட்ட பேரதிசயமான தன்மைகளையுடைய சிவ முதல்வன் இருக்கவே செய்கின்றான். அதனை நம்பி அவனது நல்ல நெறியை நீங்கள்நாடி அடையுங்கள். அடைந்து எந்த அளவு உங்கள் மனம் சோர்வடையாது நினைக்க வல்லதாகின்றதோ அந்த அளவு அவனை நினையுங்கள். எந்த அளவு அவன் பொருள் சேர்ந்த புகழை உணர்ந்து உரைக்க இயலுமோ; அந்த அளவு உரையுங்கள்; பயனுண்டு.Special Remark:
`பயனுண்டு\' என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். -திருக்குறள், 416
என்றாற்போலும் முறை பற்றி, \"செல்லுமளவும் செலுத்துமின் சிந்தையை\" எனவும், \"வல்லபரிசால் உரைமின்கள் வாய்மையை\" எனவும் கூறினார். \"வாய்மை\" என்பது ஆகுபெயராய், அதனை யுடைய புகழைக்குறித்தது. \"பெரிதுளன்\" என்றது `திண்ணமாக உளன்\" எனவும் , \"எம் இறை\" என்றது `சிவன்\' எனவும் கூறியவாறு. \"நாடுமின்\" என்றது அதன்காரியம் தோன்ற நின்றது.
இதனால், `உண்மையை ஐயுறுதலை விடுத்து இயன்ற அளவு கடைப்பிடித்து ஒழுகுக\' என உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage