
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.
English Meaning:
Think of Lord like Your Last DaysIf your fleeting life
Is its good goal to attain,
Even on death-bed
Think of the Lord;
Then will follow Siva`s grace,
No more birth will be;
The heavenly world will yours be.
Tamil Meaning:
கூட்டில் சிறிது போது தங்கியிருந்து பின்பு இரையை நாடி அக்கூட்டைவிட்டுப் பறந்து போகின்ற பறவையைப் போல உடம்பில் சிறிது காலம் வாழ்ந்து பின்பு அவ்வாழ்வினும் வேறான பயனை நாடி அவ்வுடம்பை விட்டு ஓடுகின்ற உயிர், உண்மையாகவே தான் அடையத்தக்க பயனை அடைய வேண்டின் உடம்பை விட்டுப் பிரிகின்ற காலத்திலும் சிவனை மறவாமல் நினைக்கும். அவ்வாறு நினைத்தால் எல்லாச் சிறப்பினும் மேம்பட்ட சிறப்பாகிய, சிவ ஞானத்தின்வழி சிவகதியைச் சேரும் இனி அச்சிவகதிதான், ஏனையுலகங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதாகிய உலகமும், அதனையும் கடந்த நிலைமையும் ஆகும்.Special Remark:
``பறக்கின்ற ஒன்று`` என்பது அடையடுத்த உவம ஆகு பெயர். ``கூட்டைவிட்டுப் பறக்கின்ற` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ``வேண்டின்`` என்றது `உண்மையாக விரும்பினால்` என்றபடி, உண்மையாக விரும்புதலாவது தப்பாது பெறக் கருதுதல். தப்பாது பெறக்கருதினால் உள்கும்` என்றமையால், ``உள்கா தொழியின் பயனில்லை` என்றாயிற்று. ``பின்னைப் பிறப்பொன் றிலாமை, பேருலகு`` என்பவற்றைப் பின்முன்னாக மாற்றிவைத்து உரைக்க. செய்யுள் பற்றி முறை பிறழ வைக்கப் பட்டன. சிவலோகம் சுத்தமாயாகாரியம் ஆதலின், அஃது அசுத்த மாயா காரியமாகிய ஏனை உலகங்களை வியாபகமாய் நிற்றல் பற்றி, ``பேருலகு`` என்றார். ``பேருலகும்`` எனத் தொக்கு நின்ற எண்ணும்மையை விரிக்க. முன்னர்ப் பதமுத்தி, அபர முத்திகளை அடைந்து, பின்னர்ப் பரமுத்தி அடையப்படும் ஆதலின் பேருலகும், பிறப்பிலாமையும் ஆம்` என்றார். ஆம் - வாய்க்கும்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage