
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.
English Meaning:
Seek Lord; No More Births Will BeSeek the Way
That when this body leaves,
Another body, you enter not;
``When did this human body come to me?``
Of that time you think of;
Verily will you His Grace receive.
Tamil Meaning:
`உயிராகிய நமக்கு உடல் எக்காலத்தில் வந்து பொருந்திற்று` என்று அக்காலத்தை ஆராய்ந்து உணரின், `அதனை நமக்குப் படைத்துக் கொடுத்ததலைவன் இவன்` என்பது புலனாகும். அது புலனாகவே, அவன் மீது அன்பு செல்ல அவனது அருளைப் பெறுதல் உண்டாகும். அவ்வாற்றால் இவ்வுடம்பைக் கழித்துவிட்டு, இனி மற்றோர் உடம்பில் புகுந்து பிறத்தல் இன்றி உய்ந்துபோம் வழியை நாடுங்கள்.Special Remark:
அனைத்தும் அழிந்தொழிந்த காலத்தில் உயிர்கள் உடம்பின்றியே இருக்கப் பின்பு அவற்றிற்கு உடம்பைக் கொடுத்தவன் அனைத்தும் அழிப்பவனாகிய சிவனேயாதலின், நமக்கு உடல் வந்த காலத்தை அறிந்தால், உடல் கொடுத்த தலைவன் இவன்` என்பதும் அறியப்படும் `ஆதலின் அக்காலத்தை ஆராய்ந்துணர்ந்து அருள் பெறுக` என்றும் அவ்வாறு அருள் பெறுதலே பிறவி நீங்கும் வழி யாகலின், `பிறவாமல் போம் வழி நாடுமின்`` என்றும் கூறினார். ``அந்தம் ஆதி என்மனார் புலவர்``l என்றார் மெய்கண்டதேவர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage