
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.
English Meaning:
Lord is Your RedemptionThe Lord who enters into you
And walks with you in the life
Knows sure when you in holiness ripen;
Seek the Lord
Even on the eve of your death;
He will your Redemption be
For the life to be.
Tamil Meaning:
நீவிர் போகின்ற போக்கிலே உங்களைப் போக விட்டுத் தானும், அப்போக்கிற்குத் துணையாய் உடன் வருகின்ற முதற்பொருள் சிவனே. அவன் அவ்வாறு விடுதலும், உடன் புகுதலும் நீவிர் உண்மையை உணர்தற்கு உரிய காலம் வருவதை அறிதற்காகவே யாம். ஆகையால், வாழ்கின்ற பொழுது மட்டுமின்றிச் சாகின்ற பொழுதும் அவனை நினையுங்கள். ஏனெனில், அவனே பிறவியாகிய கடலுக்கு அப்பால் உள்ள கரையாவான்.Special Remark:
அரனை முன்னர், ``பொருள்`` என்றமையால் மீட்டும் அவ்வாறே கூறினார். ஆகின்ற போது - தக்க காலம். அது, `செவ்வி` என்றும், `பருவம்` என்றும் ``போதும்`` என்றும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். எனவே, போகின்றவாறே புகுதலும் அப்பொழுது உயிர்களின் நிலையை அறிதற் பொருட்டு என்பது போந்தது. அறிவான் - அறிதற் பொருட்டு. உளன் - உடன் இருக்கின்றான். `அவனே பிறவியாகிய கடலுக்குக் கரையாகலானும், அந்தக் கரையை அடைதல் அதனை நினையும் நினைவானேயாகலானும் அவ்வழியை இடையறாது பற்றி நிற்க, அவன் எந்த நேரத்திலும் உங்களைக் கரைசேர்ப்பன்` என்பது பற்றி, ``சாகின்ற போதும் நாடுமின்`` என்றார். ``தலைவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ஆகின்ற அப்பொருள், மேற்கூறியவாறுள்ள அப்பொருள்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage