
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பதிகங்கள்

ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.
English Meaning:
Love for Lord Takes You to Siva StateBeyond the state of Isatva (Siva State)
Nothing there is;
Realizing this,
Continue ever, in love intense, for Lord;
My Lord is the Pure One
Who in love abides;
He it is,
Who illumined directions all.
Tamil Meaning:
உலகீர், எங்கள் சிவபெருமான் `தனக்கு வேறாய் விலகி நிற்கும் பொருள் எதுவும் இல்லை` என்று அறிந்து தன்பால் செலுத் தப்படும் அன்பிலே விளங்கி நிற்பவன். அத்தகைய அன்பர்க்கு அவன் அனைத்துப் பொருளின் உண்மைகளையும் தெளிவாக உணரக் காட்டி னான். ஆதலால் நீங்கள் `அவனது வியாபகத்தைக் கடந்து அவனின் வேறாக யாதொரு பொருளும் இல்லை` என உணர்ந்து உடம்பில் உள்ள பொழுதும் அவனை எவ்வகையிலேனும் உணர்ந்து போற்றுங்கள்.Special Remark:
`உங்கட்கும் அனைத்துப் பொருள்களின் உண்மை களையும் தெளிய உணர்த்துவான்` என்பது கருத்து. ``இல்லை`` என்பதற்கு, `எப்பொருளும்` என்னும் எழுவாய் வருவிக்க. `அப்புறம் இல்லை` என்க. `பாசத்துளேயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. ``பாசம்`` என்றது உடம்பை. ஏன்? சீவன் முத்த நிலையில் கூறப்படுதலின். ``தேசம்`` என்பது இட ஆகுபெயராய் அதன்கண் உள்ள பொருள்களைக் குறித்தது.இதனால், சற்குருவின் அருளால் பெற்ற அறிவிற்குப் பயன் இறைவனிடத்தில் அன்பு செய்தலே என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage