
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பதிகங்கள்

எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.
English Meaning:
Jiva Subsiding in Silence in Self Ascends to Siva-StatePowerful are the senses,
From them arise pleasure sensations;
If Jiva, in silence, subsides in Self
And ascends high,
If shall reach Siva-State;
All is but play of Siva and Sakti.
Tamil Meaning:
ஞானம் வரும்பொழுது ஆன்ம இயல்பு உள்ளவாறு விளங்கப்பெற்று, ஐந்து மலங்களும் சத்தியடங்கி நிற்க அவற்றைக் கடந்து மோனம் உடையராய் நிலைபெயராத வீட்டு நிலையை அடைதல் எளிதாகும். அந்நிலை சிவானந்தமே. ஞானியர் எல்லாரும் அதனைப் பெறவல்லவராவர்.Special Remark:
புலன் - ஞானம். அது முதலாகத் தொடங்கி, ``விளையாட்டே`` என முடித்துப் பின், `இறைவன் இறைவியுடன் இன்பம் எல்லாம் வல்லார்` என வேறு முடிபு செய்க. `எல்லாம்` என்னும் பொதுப்பெயர் இங்கு உயர்திணையாய் நின்றது. இறைவன் மெய்ப் பொருளும், இறைவி அதனது ஆனந்தமும் ஆதலின், `இறைவன் இறைவியுடன் ஆன இன்பம்` என்றார். `ஆன` என்பது தொகுத்த லாயிற்று. `சொல்லாது` என்பதன் ஈறு குன்றிற்று. `இப்பயனுக்குரிய ஞானத்தை அருளுபவன் சற்குருவே` என்பது கருத்து.இதனால், மேற்கூறிய சாதகர் எய்தும் பயன்கள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage