
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பதிகங்கள்

ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.
English Meaning:
From Jiva`s Birth to its Final Emancipation—It is All Lord`s WorkConsigning Jiva to birth`s sorrows,
Rescuing it by ministrations gentle,
Assigning it positions appropriate,
Baptising it in Jnana,
Redeeming it,
And in Mukti establishing it,
And in the end,
Placing it in Mystic Silence (Mauna)
—All these are but the Lord`s work.
Tamil Meaning:
இழிவான பிறப்பு நிலையில் அதன் இழிவு தோன் றாதவாறு மறைத்து மீள மீள அதிலே நின்ற கருவிக் கூட்டத்தின் இயல்பை உணர்த்தி, அதனின்றும் பிரித்து உயிர் தனது இயல்பினைத் தான் உணருமாறு செய்து அவ்வுணர்விலே சிறிது காலம் நின்று தாமதிக்கச் செய்தலும், பின்பு இறைவன் இயல்பை உணர்த்தி உயிருணர்வினின்றும் பிரித்து இறை உணர்விலே நிலைத்திருக்கச் செய்தலும், பின் இறையின்பத்திலே தோய்ந்து பேச்சற்றிருக்கச் செய்தலும் ஆய இவையெல்லாம் முத்தான்மாவாய் நின்ற சற்குருவின் செய்கைகளாய் விளங்கும்.Special Remark:
``இட்டது`` என்பது கருவிக் கூட்டத்தைக் குறித்த காரணப் பெயர். ஊட்டுதல், அறிவு புகட்டல். `ஊட்டி மீட்டு` என மொழி மாற்றி, ஊட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. `அத்தானத்து` எனச் சுட்டு வருவிக்க. ``தன்`` என்றது, தனது இயல் பினைக் குறித்த ஆகுபெயர். `கருவியுணர்வு` மெய்யுணர் வாகாமை எளிதில் விளங்குதல்போல, உயிருணர்வு மெய்யுணர் வாகாமை எளிதின் விளங்குவதன்றாகலின் `அதனினின்றும் நீக்குதல் தாழ்த்து நிகழும் என்றார். ஞானம் - மெய்யுணர்வு, இறையுணர்வே அது என்க. கருவியுணர்வு - பாச ஞானம். உயிருணர்வு - பசுஞானம். இறை யுணர்வு - பதி ஞானம்` கருவிக் கூட்டத்தை `இது நானன்று` எனக் கழித் தவுடன் தோன்றுவது `சித்தாகிய யானே முதற்பொருள்` என்னும் உயி ருணர்வாம் என்பதை, ``ஆன்மா இவை கீழ் நாடலாலே - காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசுஞானம்` என்பதனான் அறிக. ``மோனத்துள்`` என்பதன்பின் `இருக்க` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது என்பதனால் அறிக. ஏகாரம் பிரிநிலை. அதனால் உணர்த்தப்பட்டது. `இவை தன் செயலால் ஆவன அல்ல` என்பது.இதனால், சற்குருவின் அருளாற்றல் திறம் வகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage