
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பதிகங்கள்

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.
English Meaning:
What the Holy Guru does for His DisciplesFrom their Karmas, he extricated his disciples
Blessing them with his feet on their head,
He drove away their evil stars;
The messengers of Death
He kept at bay from them;
The miseries of unending birth
He ended for them.
Tamil Meaning:
(சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும் ஒன்பான் கோள்களின் தீங்கு நீங்கவும் யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.Special Remark:
இப்பொருட்கேற்ற கொண்டு கூட்டினை அறிந்து கொள்க. இதனுள்ளும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. `சற்குரு` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. அஃது, ``ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வரும்`` (தொல். பொருள், பொருளியல்) முறைமையில் வந்ததாகலின் இம்மந்திரமும் சற்குருவினது பெருமை கூறியதாதல் அறிக.இதனால், சற்குரு அருளால் வீடுபேறாகிய முடிநிலைப் பயனேயன்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் உளவாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage