
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பதிகங்கள்

குருஎன் பவன்வேத ஆகமம் கூறும்
பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித்
தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி
வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.
English Meaning:
Holy Guru Leads to LordHe is Guru Holy,
Who, entranced in bliss
The Vedas and Agamas speaks of,
Enters into Siva Yoga;
And all thoughts stilled,
Removes the bondage of Pasa
And leads you to Lord.
Tamil Meaning:
`குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.Special Remark:
ஆகவே, அவன் வழியாகவே பக்குவிகள் சிவனை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.இதனால் குருவினாலன்றி ஞானம் எய்துதல் கூடாமையால் `குருவினாலன்றி வீடடைதல் இயலாது` என்பது கூறப்பட்டது. சகல வருக்கத்தினருள் முன்னைத் தவமிகுதியால் பிரளயாகலர் விஞ்ஞான கலரோடு ஒப்போர் மிக அரியர் ஆதலின் பொதுநிலை இதுவாதலைக் கூறியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage