
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பதிகங்கள்

கறுத்த இரும்பே கனகம தானால்
மறித்திரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
English Meaning:
He Takes Them to the Bourne From Which They Return NotThe black iron, transmuted into gold,
To black iron returns not;
Even so,
He who once the Guru`s grace received
Does not to birth return.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.Special Remark:
பொருளில், ``குருவருள் பெற்றான்`` என்றதற்கு ஏற்ப உவமையில், `இரத குளிகை சேரப்பட்டு` என்பதும் உவமையில் ``கனக மதனால்`` என்றதற்கு ஏற்ப, `சிவமாகியவன்` என்பதும் வருவித்துக் கொள்க. ``குரு அருள் பெற்றான்`` என்பதை மூன்றாம் அடியில் முதற் கண் கூட்டியுரைக்க. குறித்தல் - சற்குரு தன் மாணவனைச் சிவமாகப் பாவித்தல். ``குரு`` என்றது, அதிகாரத்தால் சற்குரு மேலதாயிற்று.இதனால், சற்குருவின் பெருமை மேலும் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage