
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
பதிகங்கள்

உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முத லாகிய தத்துவம் ஆமே.
English Meaning:
Efface the EgoHe is your Beginning;
He is the life in your fleshy body;
He is the God in Mountain Kailas
None knows His design;
When the Primal One sways you,
And your ego entire effaced,
Then shall you reach the Lord,
Above Tattvas all.
Tamil Meaning:
``காட்சியால்`` உணரப்படும் உடம்பேயன்றிக் கருதலால் உணரப்படும் உயிரும் உடம்பினுள்ளே உண்டு என்னும் உண்மையையும், `அவ்வுயிருக்குத் தலைவராகச் சொல்லப் படுவோர் பலருள்ளும் கயிலைக் கடவுளாகிய சிவனே முழுமுதல் தலைவன்` என்னும் உண்மையையும் அறிகின்றவர் உலகத்து அரியர். இனி அவ் வுண்மையை உணர்ந்தவர்களும் அவற்றை உணர்வதற்குமுன் கொண்டிருந்த ஆசை வழிப்பட்ட செயல்களை முற்றவிடுத்தால்தான், ஓர் உயிரும் எஞ்சாதபடி ஒவ்வொன்றிற்கும் முதலாய் உள்ள மெய்ப் பொருளின் விளக்கம் நிரம்ப உண்டாகும்.Special Remark:
உயிரை, `உன்னியுணரப்படும் முதல்` என்றமையால், `ஊன் - உடம்பு - கண்டுணரப்படும் முதல்` என்றது பெறப்பட்டது. உன்முதல், வினைத்தொகை. கல் - மலை, `எனும்` என்பதை ``ஈசன்`` என்பதனோடும் கூட்டுக. படிமுறையால் உணர வேண்டுதல் பற்றி இரு தொடராக ஓதினார். ஏறிய - ஏறியன. அஃதாவது `பழகிப்போன செயல்கள்` என்றபடி. `நன்குஏறிய` என்க. `நன்கு` என்பது கடைக் குறைந்து நின்றது. `நாமமும்` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று. நாமம் - பெயர்.இதனால், `அறிதற்கரிய உண்மைகளை அறிந்தவராகிய மெய் அறிவாளரும் கூடா ஒழுக்கம் உடையாராயின் அவ்வறிவால் பயன் எய்தார்` என்பது கூறி முடிக்கப்பட்டது.
[இம்மந்திரத்திற்குப் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற ``இந்தியம் அந்தக் கரணம் இவை`` எனத் தொடங்கும் மந்திரம் அடுத்த தந்திரம் முதல் அதிகாரத்தில் இருந்ததாகும்.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage