
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
பதிகங்கள்

காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி
காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி
காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.
English Meaning:
Lord is the Light of Our EyesThe eye that sees not
Is by cataract (ignorance) covered;
The Lord is the Light Unseen,
Even for those
Whose eye no sight hath;
He is the Eye Divine,
Even for those
Who have seen Him not;
They who have seen Him
In the inward eye
Have verily the Truth seen
All illusion rid.
Tamil Meaning:
முகக்கண்கள் புறப்பொருளைக் காணுதல் இயல் பாயினும் சில கண்கள் அப்பொருள்களைக் காணமாட்டாதன ஆதற்குக் காரணம் அக்கண்ணில் ஒளிக்கு மாறாகப் படலம் இருப்பதே யாகும். இனி முகக்கண் உடையார்க்கே யன்றி அக்கண் இல்லா தவர்க்கும் அகக்கண்ணாகிய அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாம் சிவ ஒளியைத் தற்போத வழியாற் காணாது அருள் வழியாகக் கண்டவரே கள்ளத்தனமாகச் செய்யும் செயல்களைச் செய்யாது ஒழிவர். அந்தச் சிவ ஒளி அகக்கண்ணாகிய ஞானக் கண் இல்லா தவர்க்குக் காணப்படாத ஒன்றேயாய் இருக்கும்.Special Remark:
`அதனால் அவர்கள் வினை விட்டொழியாது செய் பவரேயாவர்` என்பது குறிப்பெச்சம். `வறியவர்கட்கு அடகுதான் சோறு` என்றல் போல, ``காணாத கண்ணில் படலமே கண்ணொளி`` என்றார். அங்ஙனம் கூறியது, காணுதற்குரிய கண் காணாதொழிதற்குக் காரணங் கூறியவாறு. புறக்கண் பற்றிய இக் கூற்று உவமையாய், அகக்கண்ணை மறைத்து நிற்கும் மலம் காரணமாச் சிவ ஒளியைக் காண்டல் இயலாமையை விளக்கிற்று. இரண்டாம் அடியில் ``காணாதவர்`` என்றது அகக்கண்ணால் காணாதவரையேயாம். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.இதனால், `கூடா ஒழுக்கம் உடையார் ஞானியர் ஆகார்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage