
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
பதிகங்கள்

உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும்
சிலஆணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை யறிவதே.
English Meaning:
Realize the SelfHe is the world`s axle-pin;
The Light Resplendent;
The Siddha True;
He pervades the elements five,
The earth, sky and the rest;
He is the Lord of Devas
He with Sakti stands;
To praise Him in Words high
Is your Self to realize.
Tamil Meaning:
அனைத்துலகங்களின் தொகுதியாகிய தேரினை நிலைபெறச் செய்கின்ற அச்சாணியாய் உள்ளவன் ஒளியாய் உள்ள அனாதி முத்தனாகிய சிவனே. அவன் நிவிர்த்தி முதலிய ஆதார கலைகள் ஐந்திலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்றான். அவ் வைந்து கலைகளுக்கு உட்பட்டுள்ள இடங்களில் சிற்சிலவற்றிற்குத் தலைவராய், `தேவர்` எனப்பெயர் பெற்று விளங்கும் அனைவர்க்கும் தலைவனாய் உள்ள அந்தப் பெருமானையே ஒருவன் தன் தலைமேல் வைத்து ஒழுகுவானாயின், அவன் அவ்வாறு ஒழுகுதலே தனது இயல்பை உள்ளவாறு அறிந்துஒழுகும் ஒழுக்கமாகும்.Special Remark:
`சித்தன், முத்தன்` என்பன ஒருபொருட்சொற்கள். ஆதிமுத்தர் அனைவர்க்கும் முன்னே முத்தனாய் உண்மைபற்றி அவ்வானாதி முத்தனை, ``உத்தம சித்தன்`` என்றார். நிலம் - ஆதாரம். அஃது ஏனை ஐந்து அத்துவாக்களுக்கும் ஆதாரமாய் உள்ள கலைகளைக் குறித்தது. நேர்மை - நுண்மை. `அத்தேவர் பிரானை` எனச் சுட்டுவருவித்துக்கொள்க. வாணி, `மொழி` எனப் பொருள்தரும் வடசொல். அது மொழிவடிவாய் விளங்கும் தியானத்தைக் குறித்தது. இவ்வாறு ஒழுகுவோர் கூடாவொழுக்கத்தைக் கொள்ளார் என்பதாம்.இதனால், `எந்நிலையிலும் கூடா ஒழுக்கம் திருவருள் நெறிக்கு ஏலாததே` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage