
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
பதிகங்கள்

ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு)
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.
English Meaning:
They Think of I and You as TwoThe two, I and You, in union one stood,
Undifferentiated as One Becoming;
For them is there no more Two, I and You;
They who speak of I and You as two
To them He is I and You, forever two;
He, the Being, One and One above.
Tamil Meaning:
`பலவாய் உள்ள உயிர் ஒன்றாய் உள்ள சிவத்தோடு இரண்டறக் கலத்தலே முடிநிலைப் பயன்` என்பது எல்லோர்க்கும் உடன்பாடு. ஆயினும், ஒரு பொருளாய் உள்ள பிரமமே அவிச்சை யால் பலவாய் உள்ள உயிர்களாக மயங்கி அறியப்பட்டு, அவிச்சை நீங்கியவுடன் உயிர் முன்போல ஒரு பொருளாகிய பிரமத்தோடு ஒன்றாய்விடும் எனக் கூறுகின்றவர்கள் அவிச்சைக்குக் காரணம் கூறாமையால் உயிர் பிரமமேயான நிலைநிலைத்தல் இன்றிப் பிரமமும் உயிரும் வேறு வேறாய் நிற்கும் அவிச்சை நிலையே நிலைபெறுவ தாகும். ஆகவே அவர்கட்கு இரண்டும் ஒன்றாகும் நிலை என்றும் கிட்டுவதின்றாம் இனி `ஒன்றாகிய பரமனும், பலவாகிய உயிர்களும் என்றும் வேறு வேறாக இருத்தல் அன்றி, ஒன்றாதல் இல்லை` எனக் கூறுவார்க்கு அவ்வாறு நிற்றலே பயனாவதன்றி, முதற்கண் கூறிய முடிநிலைப் பயன்கிட்டாதாம்.Special Remark:
அதனால் `அவ்வாறெல்லாம் கூறுவாருடன் எதிர்வாதம் செய்து பொழுதைப் போக்குதலும் ஞானியர்க்குக் கூடா ஒழுக்கம்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில் ``ஒன்று, இரண்டு`` என்றது, `முதலாவது, இரண்டாவது` எனவும், ஏகாரம் தேற்றம். அது ஈற்றடியிலும் சென்று இயையும். ஆகவே, இரண்டிடத்தும் ``ஒன்றிரண்டு`` என்பன பயனிலையாம் ஆகலின், அவற்றிற்கு எழுவாய் வருவித்து, `ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே என்று உரைதருவார்க்கு எலாம் ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே (அவை ஒன்றாதல் இல்லை) என்க. ``ஒன்றோடொன்றானதே`` என்பதில் முதற்கண் நின்ற ஒன்று சிவம். ஒன்றாதலுக்கு உயிர் என்னும் எழுவாயும், `ஆனதே முடிநிலைப் பயன்` என்னும் சொல்லெச்சமும் வருவித்து முதலில் கூட்டியுரைக்க.இதனால், உண்மை ஞானியர்க்குப் பிற மதத்தவரோடு தருக்க வாதம் செய்து பொழுதை வீண்படுத்துதலும் குற்றமாதல் கூறப்பட்டது. சாத்திரங்களில் சொல்லப்படுகின்ற பிற மத மறுப்புக்கள், அம்மதம் பற்றி மயங்கும் மாணாக்கரை நோக்கி விளக்கம் தருவனவேயாகும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage