
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
பதிகங்கள்

தானந்த மாமென நின்ற தனிச் சுடர்
ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.
English Meaning:
Realize the SelfHe is the world`s axle-pin;
The Light Resplendent;
The Siddha True;
He pervades the elements five,
The earth, sky and the rest;
He is the Lord of Devas
He with Sakti stands;
To praise Him in Words high
Is your Self to realize.
Tamil Meaning:
மாணவகனே, நீ `எல்லாவற்றையுங் கடந்துவிட்ட எனக்கு இனி அறம் பாவங்கள் எங்குள` எனச் செருக்கி, தேன் துளியால் வரும் இன்பம்போல மிகச்சிறியனவாய்ப் பெறப்படுகின்ற சிற்றின்பத்தைப் பெறும் செயலை அறவே ஒழி. அவ்வாறு ஒழித்தால்தான் சிவனது அளவில்லாத இன்பத்திற்கு ஏதுவாகிய அவனது அருள் முற்றக் கிடைக்கும்.Special Remark:
இது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்ட பொருள், கோன் - தலைவன்; பதி; சிவன். முன்னிரண்டடிகளில் அவனது பெருமை சொல்லப்பட்டது. அஃதாவது, உலகம் அனைத்திற்கும் தானே முடிவிடம்` என வேதம் முதலிய பல உண்மை நூல்களாலும் சொல்லப்பட நின்ற விளக்காயும் எல்லாப் பொருட்கும் பின்னும் முன்னுமாய் விளங்கும் ஒளியை யுடைய விளக்காயும் உள்ளவன் என்பது. ``ஊன்`` என்றதும் உடம்பு முதலாய உலகங்களையே, `அவற்றிற்கு அந்தமாய்ப் பின் ஆதியாகி உலகமாயினான்` என்க. `எஞ்ஞான்றும்தான் சுதந்திர அறிவனே யாவதல்லது பிறிதொன்று விளக்க விளங்கும் பரதந்திர அறிவினன் அல்லன்` என்றற்கு `சுடர்` என்பதனை இருகாற் கூறினார். ``தேன் அந்தம்`` என்பதில் ``அந்தம்`` என்றது, `விரைய முடியும் துளி` என்றபடி. அவ்விடத்தும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. இங்கு ``குணம்`` என்றது ஆனந்தத்தையே, ``உணர்ந்தார்க் குணர்வரியோன்தில்லைச் சிற்றம்பலத்தொருத்தன் - குணந்தான் வெளிப்பட்ட ... ... ... ... இக்கொடியுடை தோள்`` (தி.6 ப.1 பா.5) என்பதில் ``குணம்`` என்றது போல்,இதனால், `எஞ்ஞான்றும் சிற்றின்பத்தில் இச்சை செய்பவர் திருவருளை முற்றப் பெறார்` என்பது கூறப்பட்டது. ``வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக மாற்றி`` (தி.8 திருக்கோவையார் , 9) என்பதிலும் இக்கருத்தே அருளிச் செய்யப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage