
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
பதிகங்கள்

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.
English Meaning:
Light of Grace Illumines the Path of DevoteeHe is the Lord of all Space in directions eight;
Bear His holy Feet on your head,
And He shall appear to you
With His Consort of Grace
Wreathed in clusters of fragrant blooms
In Her twisted tresses
And for them who are thus made wise
The Blue Flame of Her floating Grace
Shall, for ever, illumine the Path.
Tamil Meaning:
எட்டுத் திசைக்கும் தலைவனாகிய சிவனை அவன் துணைவியோடும் அறிவினுள் அறிந்து மறவாதிருங்கள். ஏனெனில், அவ்வாறு இருக்கும் அறிவை உடையவர்கட்கே சத்திநிபாதம் தொடர்ந்து முதிர்வதாகும்.Special Remark:
தாங்குதல் - சுமத்தல்; இங்கு அறிவினுள் அறிதலைக் குறித்தது. `தலைமகனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. தூங்குதல் - மிகுதல். ``ஒளி நீலம்`` என்பதில் பொதுப்பெயர் முன்னும், சிறப்புப்பெயர் பின்னுமாய் நின்றன. சிவ ஒளி செம்மையும் சத்தி ஒளி நீலமும் ஆதல் அறிக. `தலைமகனைப் புரிகுழ லாளொடும் தாங்குமின்` எனக் கூட்டுக.இதனால், `சத்தநிபாதக் குறி தோன்றப் பெற்றோர் பின்னர் அந்நிலையை நெகிழாது பற்றி நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage