
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
பதிகங்கள்

இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.
English Meaning:
Arul Sakti Helps Attain LiberationThe Primal Sakti releases Jiva from enveloping gloom,
Rows it across the sea of myriad births,
Grants the Grace Abiding;
And lands it on the shores of Truth`s Bliss
United in the Lord of Heavenly Beings,
—Themselves as yet unfree
From Impurity`s obscuration.
Tamil Meaning:
`ஆதி` எனப்படும் சத்தி (முற்பக்கத்து நிலவுபோல) ஆணவ இருளை நாள்தோறும் படிமுறையாகப் பல பிறவிகளிலும் நின்று கழித்து, அம்மலம் பரிபாகம் உற்ற காலத்து அருளாகிய தனது இயற்கை தன்னைவிட்டு நீங்கியது போலக் காட்டிய அதனைவிடுத்து அருளேயாதலில் மாறாது நின்று, தனது மறைத்தலினின்றும் நீங்கமாட்டாத தேவர்களை அவரவர்க்கு ஏற்ற நிலையில் வைத்து ஆள்பவனாகிய சிவனோடு நீங்காதுநின்று அழிவில்லாத இன்பத்தை நுகர்தலாகிய நிலையை ஆன்மாவுக்கு அருளுவாள்.Special Remark:
``ஆதி`` என்பதனை முதலில் வைத்து ``எண்ணில் பிறவி கடத்தி`` என்பதனை அதன்பின்னரும்,. ``அருளும்`` என் பதனை இறுதியிலும் கூட்டி உரைக்க. ``அருள்`` என்பது ``அருளாகிய இயல்பு`` என்றவாறு. `நீங்காவண்ணமாய்` என ஆக்கம் வருவிக்க. மருள் - மயக்கம். இது மலங்களின் காரியம். இக்காரியமும் சிவனது சத்தியின்றி நிகழாது. அதனால், அச்சத்தி இதனை நிகழ்த்து விக்கும் நிலையில் `திரோதானசத்தி` எனப் படுகின்றது. இங்கு, ``ஆதி`` என்றது திரோதான சத்தியையே. ஓரிடத்தினின்றும் நீங்கிப் பிறிதோ ரிடத்துச் செல்லுதலினின்றும் நீக்கி, நசித்தலை உணர்த்தற்கு, ``பொருள் நீங்கா`` என்றார். புலம் - அறிவு. அஃது ஆகுபெயராய் ஆன்மாவைக் குறித்தது. பயில் - பயிலல். நுகர்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.இதனால், சிவனது சத்தி மலபரிபாகம் வருதற்கு முன்பு திரோ தானமாய் நின்று உபகரித்து, பரிபாகம் வந்தபின் அருட்சத்தியாய்ப் பதிந்து உபகரித்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage