
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
பதிகங்கள்

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.
English Meaning:
Grace IlluminesAs when groping in a chamber enveloped in thick gloom,
A sudden shaft of light pierces and illumines,
Like it into the gloom of bewildering Ignorance
Is the Presence of God and Goddess of Grace,
Lord that is Nandi worshipped in the blossom of heart.
Tamil Meaning:
இருள் சூழ்ந்திருந்த அறையில் உள்ள பொருளைக் காணலுறும்பொழுது ஒளிமிக்க விளக்குச் சென்று எரிந்தாற்போல, அறியாமை சூழ்தலால் மயக்கம் பொருந்தி நின்ற உள்ளத்தாமரை யின்கண் சிவன், அருள் மிகுந்து, அப்பனும், அம்மையுமாய் நிற்பான்.Special Remark:
எனவே, விளக்குச் சென்று எரிந்தபொழுது அந்த அறையில் இருள் நீங்கினாற்போல, இறைவன் அருள் மிகுந்து நின்ற பொழுது உள்ளம் மருள் நீங்கி உண்மையை உணர்தல் பெறப்பட்டது. இது பயன் பற்றிய சுட்டிக்கூறா உவமை. பொருளாவது, இங்கு ஒளி `மயக்கத்து மலர்` எனவும் `நந்தி ஆம்` எனவும் இயையும். ``மலரின் கண்` என உருபுவிரித்து, அதனையும், ``ஆம்`` என்பத னோடு முடிக்க.இதனால், முதற் சத்திநிபாதத்தின் இயல்பு உவமையில் வைத்து விளக்கப்பட்டது. முதற் சத்திநிபாதத்தில் சத்தி நிவிர்த்தியாய்ப் பதிந்து, நிலை, நிலையாமை உணர்வைத் தோற்றுவித்து, `உலகப் பற்றை நீக்கும்` என்பர் சிவாக்கிர யோகிகள்.
1498. இனி ஐந்து மந்திரங்களால் இரண்டாம் சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage