
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
பதிகங்கள்

கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.
English Meaning:
Descent of Grace Snaps Cycle of BirthsThey that have sported in the waters of Virgin Grace,
No more shall wallow in the filthy waters of virgin`s lust;
If they but seek to sport in the Holy Virgin`s Waters of Grace,
No more births shall they in future take.
Tamil Meaning:
கன்னியாகுமரிக் கடல் துறையில் மூழ்கி விளை யாடும் மாந்தர் அந்நீர் வடிவாய் நிற்கும் சத்தியின் பதிவில் மூழ்கி விளையாடும் எண்ணத்தினைக் கொள்கின்றாரில்லை. அக்கருத்து அவருக்கு உண்டாகுமாயின், அடுத்து ஒரு பிறவிதானும் உண்டாக மாட்டாது; வீடு பெறுவர்.Special Remark:
``ஆடிய, ஆடுங் கருத்திலர்`` என்ற குறிப்புக்களால், `கன்னித் துறை` என்பது சொற்பின் வருநிலையாய், இரண்டிடத்தும் வேறு வேறு பொருளைக் குறித்தது.இதனால், சத்திநிபாதம் வரப்பெற்றார்க்குப் பிறவியறுதல் கூறப்பட்டது. இதுபோல்பவை இவ்வதிகாரத்தின் எப்பகுதியிலும் இயையுடையனவாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage