
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
பதிகங்கள்

எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.
English Meaning:
Siva and Sakti are One and SameInfinite the passage of Time`s Flood
Yet they say, He and His Consort stand one;
For them that adore Him daily in devotion,
He is verily the unfailing proof
Of labour readily rewarded.
Tamil Meaning:
`பிறந்து இறந்து உழன்ற காலங்கள் எத்துணையன கழியினும், அவ்வுழலலை நீக்கி நிலைபெறச் செய்யும் தலைவர் சத்தியும், சிவனுமாய அவரன்றிப் பிறர் இலர்` என, அனுபவம் வந்தோர் அறுதியிட்டுரைப்பர். இனித் தன்னை நாள்தோறும் தப்பாது வழிபடுவோர்க்குச் சிவன் கைமேல் பயனைப் பெறுவிக்கின்ற துணைவனாய் விளங்குவான்.Special Remark:
எய்திய காலங்கள் - சென்ற காலங்கள். யாண்டும், உகமும், கற்பமும் என்னும் இப்பகுதிகள் பற்றி, ``காலங்கள்`` எனப் பன்மைப்படுத்து ஓதினார். தனி - ஒப்பின்மை; `தம்மோடொப்பர் பிறரை இவர்` என்றவாறு. நாயகம் - தலைமை; தலைமை யுடையாரை, `தலைமை` என்றே உபசரித்து ஓதினார். முன்னர், `சிவனும்` என்னாது ``தானும்` என்றமையால், பின்னர், ``தன்னை`` என்றது சிவனையே யாயிற்று. கருமம் - பயன். காட்டு - காட்டாய் நிற்கும் பொருள். ``அது`` பகுதிப் பொருள் விகுதி. காட்டாதற்கு. ``தான்`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `சத்திநிபாதம்` என்றே கூறப்படினும், சத்தி தனித்து நில்லாமை உணர்த்துவார். ``தையலும் தானும்`` என முன்னர்க் கூறிப்பின்னர்க் காட்டாதலைச் சிவன்மேல் வைத்தே கூறினார். சிவாக்கிர யோகிகளும் `சத்தி தனது பதிவில் நிவிர்த்தி முதலியவளாய் உள்ள பொழுது, சிவனும் நிவிர்த்தீசன், பிரதிட்டேசன், வித்தியேசன் முதலியவனாய் நிற்பன்` என்பர். ``வணங்கும் அவர்கட்குக் காட்டாம்`` என்றதனால், இச்சத்திநிபாதம் கிரியையின்வழி மலத்தைப் பாகம் அடைவித்துத் தானும் முதிருதல் பெறப்பட்டது.இதனால், இரண்டாம் சத்திநிபாதம் கிரியையால் ஆன்மாவை உய்வித்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage