
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
பதிகங்கள்

அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.
English Meaning:
Conduct of Aspirant For Yoga SamadhiTo give up thoughts of women
To think no more of kith and kin
To be meek in learning
To abound in jnana
To be sparing of speech
To listen to deeds of Siddhi
To sit unruffled
—These the ways of the aspirant of yoga samadhi.
Tamil Meaning:
மனைவியைத் துறத்தல், மக்கள் முதலிய பிற சுற்றத்தையும் துறத்தல், சிவனை வழிபடுகின்ற நூல் அறிவு மிகுதல், வாய்வாளாதிருக்கும் சிவயோகிகள் அடைந்துள்ள பர சித்திகளை அவரிடம் கேட்டல், உலகியலின் தாக்குதலால் உள்ளம் திரிவுபடா திருத்தல், பிராணாயாமத்தை எளிதாகச் செய்தல்.Special Remark:
இதனுடன், வருகின்ற திருமந்திரத்தையும் கூட்டி வினை முடிவு செய்க. அணங்கு - பெண்டு. அற்றம் - அறுதி. அருஞ் சனம் - சுற்றம். நீவல் - நீக்குதல். சிணுங்குதல் - முணுமுணுத்தல்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage