
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
பதிகங்கள்

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.
English Meaning:
Perform Siddhis in MeeknessPray and seek Lord in directions eight
Adore the Lord with constancy in directions eight
Attain Eight Siddhis Great in directions eight
And in meekness perform in directions eight.
Tamil Meaning:
யாவரும் அட்டமா சித்திகளைப் பெற்று, அவற்றை எட்டுத் திக்கிலும் சென்று விளங்கக் காட்டிப் பெருமை பெற்றது, சிவபெருமானைப் பல்லாற்றானும் வழிபட்டேயாம்.Special Remark:
பணிதல், நிலத்தில் வீழ்ந்து வணங்குதல், தொழுதல், கும்பிடுதல், அணிதல், ஒப்பனை செய்து மகிழ்தல், தணிதல், அடங் குதல். துணிதல் - நம்புதல். ``எண்திசை சென்று அட்டமா சித்தி தாபித் தவாறு, பரமனை நாடித் துணிந்து எண்திசையிலும் சென்று பணிந்து, தொழுது, அணிந்து, தணிந்து`` எனக் கூட்டுக. `சிவபெருமானை எவ்வகையிலேனும் நினையாமல் சித்தி பெறுதல் கூடாது` என்பதாம்.இதனால், அட்டமா சித்திப் பேற்றிற்கு ஆவது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage